புரியாப் பரிசாய்ப் பிரிக்கும் கம்பி
இருக்கட்டும் தம்பி
பிரியாப் பிரியப் பிரவாகம் என்றும்
இருக்கட்டும் தம்பி
ஏதேதோ செய்துவிட்டேன் அன்று
பரிகாரஞ் செய்து விட்டேன் இன்று
எந்தன் தரை மாலைக் கோலம்
உந்தன் மனம் நிர்மல வானம்
விழிமீறிக் கண்ணீரால் கேள்விகள்
மொழிமீறிக் கண்ணீராய் பதில்கள்
ஏழைக்கு விதிப்பாதை என்றும் ஒருவழி
ஆயுளோ கயிறோ ஆரறிவார் நம்வழி?
ஆயிளாயின் அவரே பார்த்துக் கொள்வார்
கயிறாயின் அவரே பார்த்துக் கொல்வார்
உன்கவலை எனக்கு என்கவலை உனக்கு
போதுமடா போதும்
என்னவம் விழுங்கு உன்னகம் கையெடு
வருவேன் ஒருநாள் தம்பிக்குத் தம்பியாய்!
வணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் வரிகள் மனதை உருகவைத்து விட்டது உறவின் பாசம் நன்கு வெளிப்படுகிறது கவிதை அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-