புவியில் அடிப்படையில் மூன்று பாறை வகைகள் உள்ளன. தீப்பாறை, உருமாறிய பாறை, படிவுப் பாறை என்பனவாகும். பையனின் பாடப்புத்தகத்தைப் படித்துச் சொல்லிக் கொடுக்கும் போது தோன்றிய கவிதை! படங்கள் விக்கிபீடியாவிலிருந்து!
தீப்பாறை:
மேல்வறுக்கும் ஆதவன் அரைவிடுப் பெடுப்பான்
மூச்சுமுட்டும் பாதாளன் முச்சூடும் அவிப்பான்
இருதலைக் கொள்ளியாய் எரிந்தெரிந் திறுகி
கல்லாய்ச் சமைந்து பிறந்திடும் பாறை!
உருமாறியபாறை:
இயற்கைச் சிற்பி வளியுளியால் செதுக்க
மழைநீராட்டி தூளெலாம் ஒற்றி ஒதுக்க
நுனிசிறுத்து அடிபெருத்து புவிக்கோ புரமாய்த்
திருவாகி உருமாறிக் கொண்டிடும் பாறை!
படிவப்பாறை:
மூடர் செல்வம்போல் அறிவோர் துயரம்போல்
செதுக்கிய தூளெலாம் வெள்ளத்தில் புரண்டு
அருவிபல கண்டு சமவெளியுந்தான் கண்டு
வண்டலாய்ப் படிந்தும் கருவாகும் பாறை!
முப்பாறை சொல்லும் கதையென்ன காண்;
இளக்கமும் இறுக்கமும் இங்கு பிறப்பிடமாம்
எதுவரினும் நிலையான உறுதியே இருத்தலாம்
கரைந்தாலும் பயனிட்டுப் புகழ் கொள்தலாம்.
தீப்பாறை:
மேல்வறுக்கும் ஆதவன் அரைவிடுப் பெடுப்பான்
மூச்சுமுட்டும் பாதாளன் முச்சூடும் அவிப்பான்
இருதலைக் கொள்ளியாய் எரிந்தெரிந் திறுகி
கல்லாய்ச் சமைந்து பிறந்திடும் பாறை!
உருமாறியபாறை:
இயற்கைச் சிற்பி வளியுளியால் செதுக்க
மழைநீராட்டி தூளெலாம் ஒற்றி ஒதுக்க
நுனிசிறுத்து அடிபெருத்து புவிக்கோ புரமாய்த்
திருவாகி உருமாறிக் கொண்டிடும் பாறை!
படிவப்பாறை:
மூடர் செல்வம்போல் அறிவோர் துயரம்போல்
செதுக்கிய தூளெலாம் வெள்ளத்தில் புரண்டு
அருவிபல கண்டு சமவெளியுந்தான் கண்டு
வண்டலாய்ப் படிந்தும் கருவாகும் பாறை!
முப்பாறை சொல்லும் கதையென்ன காண்;
இளக்கமும் இறுக்கமும் இங்கு பிறப்பிடமாம்
எதுவரினும் நிலையான உறுதியே இருத்தலாம்
கரைந்தாலும் பயனிட்டுப் புகழ் கொள்தலாம்.
அருமை! பாறையை வைத்து மகனுக்குப் பாடம் நடத்திய அதே வேளையில் எங்களுக்கும் பாடஞ்சொன்ன விதம் அருமையிலும் அருமை! வாழ்த்துகள் ஔவை!
பதிலளிநீக்குநன்றி அப்துல் காதர்
பதிலளிநீக்குகவிதை ஒரு பவழப் பாறை
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பபூ அறிமுகம்மானது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/08/6_24.html?showComment=1377308895348#c7692767288255196790 வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-