நத்தையாரே நத்தையாரே எங்கே போறீங்க?
சொத்தைவித்து புத்தகத்தை வாங்கப் போறேங்க!
நத்தையாரே நத்தையாரே என்ன செய்றீங்க?
வித்தையெல்லாம் கத்துக்கிட்டு ஜெயிக்கப் போறேங்க!
நத்தையாரே நத்தையாரே என்ன படிச்சீங்க?
ஒத்தையாளா ஆங்கிலந்தான் படிச்சு வைச்சேங்க!
நத்தையாரே நத்தையாரே எதுக்கு படிச்சீங்க?
தமிழைப்போல இனிக்குதான்னு பார்க்கப் படிச்சேங்க!
நத்தையாரே நத்தையாரே என்ன கண்டீங்க?
முத்தான தமிழைப் போல ஏதுமில்லீங்க!
இது இன்றைய தொடக்கப் பள்ளிகளில் பாடமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். கனவு மெய்ப்படுமா?
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஔவை!
படித்தவுடன் நானும் அப்படித்தான் நினைத்தேன்,காதர்
பதிலளிநீக்குவணக்கம்...
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/6_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...