புதன், மார்ச் 28, 2012

நட்சத்திர மினுக்கல்


நட்சத்திர மினுக்கல்

பசிக்குப் புசித்தான்!
புசிக்க‌ ருசிக‌ண்டு
ருசியோடு புசித்தான்!
ருசிக்கப் புசித்தான்!
அநிச்சைப் புசித்தலில்
ருசிபசி மறந்தான்!
இப்போதோ பாவம்
நட்சத்திர மினுக்கலில்
எச்சில் விழுங்குகிறான்.

3 கருத்துகள்:

  1. பசி ருசி வழியிலே கவிதை சுவராசியம் தருகின்றது.

    பசி ருசி மறந்து நட்சத்திர மினுக்கலில் எச்சில் விழுங்குகின்றான் என்ற வரிகள் எனக்குப் புரியவில்லை சகோ.

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாமார்ச் 28, 2012 9:00 PM

    அனோரெக்சியா போல...-:)

    பிடித்தது...

    பதிலளிநீக்கு
  3. மனிதன் முதலில் பசிக்காகப் புசித்தான். பின்னர் புசித்ததில் ருசி கண்டு ருசியோடு புசிக்க ஆரம்பித்தான். பின்னர், ருசிக்கின்றதே என்பதற்காகப் புசித்தான். பின்னர் ருசித்தலும் இன்றி அநிச்சையாகவே புசிக்க ஆரம்பித்ததில் ருசி பசி என்று எல்லாவற்றையும் மறந்து கபளீகரம் செய்ய ஆரம்பித்தான். இறுதியில் புவியில் அனைத்தையும் காலி செய்து விட்டு வானில் எங்கோ தெரியும் நட்சத்திரத்தின் மினுக்கலில் எச்சிலை முழுங்க வேண்டிய நிலையில் இருக்கின்றான். மொத்தத்தில் இருப்பதை விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படுகின்றான் என்பதே மையக்கருத்து.

    பதிலளிநீக்கு