சனி, ஜனவரி 14, 2012

உலகம் உருளுமாய்யா?




சாமிக்கும் முழுக்க அலுக்க வேலையுண்டு
அதிகாலை எழுந்து பன்னீரில் குளிப்பதுண்டு
சாயுங்காலம் விழுந்து பள்ளியில் படுப்பதுண்டு
தினப்படி ஒழுக்கமா யாறுகால பூசையுண்டு
வந்து போவோர்க்கு மறுக்காமல் அருளுமுண்டு!

நம்வசமாய் நாடாமல் இலவசங்கள் வந்தாலும்
கடலோடிப் புள்ளைக திரவியங்கள் சேர்த்தாலும்
மாச‌த்தில் மழைபெஞ்சு மண்ணீர் ஆகையிலே
ரெட்டைக் காளை ஏர்பூட்டி உழுகையிலே
மண்ணும் பிரண்டுச்சு மனசும் பிரண்டுச்சு!

வாழ்க்கையே கடனாய் கடனே வாழ்க்கையாய்
வாழுங் காலமெலாம் மலையேறிப் போவுமோ?
பாழும் உழவனை மதிக்கவும் தெரிந்திடுமோ?
வருசத்துக்கு ஒருமாசம் தைமாசம் வந்திடுது
உழவனுக்கும் மாட்டுக்கும் பொங்கலும் வெந்திடுது!

செம்மண்ணில் கலந்தாலும் நீரென்னவோ நீர்தானய்யா!
செவ‌க்காட்டில் வெளைஞ்சாலும் பொங்கலோ இனிப்பய்யா!
செவத்தத்தோலு கறுத்தத்தோலு மாடும்நானும் ஒன்றய்யா!
வெளிப்பார்க்க முரடானாலும் உள்ளேமனசு கரும்பய்யா!
நாங்கமட்டும் இல்லையின்னா உலகம் உருளுமாய்யா?

1 கருத்து:

  1. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    பதிலளிநீக்கு