மேகச் சித்திரங்காள்! வானத் திரையில்
அழகுப் பதுமையா யெண்ணிலா வடிவெடுத்து
வளர்ந்து அழிந்து வளர்ந்து அழிந்து
மாயாது கலைவதன் காரணம் யாதோடி?
நாளொரு புதுமையாய் பொழுதொரு வடிவமாய்
நடைபயின் றாலுமெமை வாழ்த்தி ரசிப்பரோ?
நாளொரு பிறையுடன் முகமுழு கறையுடன்
தேய்ந்திடும் நிலவையே அழகென்பர் ஏனோ?
அடிப்போடி!
அவரவர் இயல்பில்
அவரவர் நின்றால்
பிறையின் கறையதும்
மேகம் கரைவதும்
என்றென்றும் அழகே!
உனைக் கண்டு
ரசித்து மயங்க
எனைப் போல்
ஆயிரம் பேருண்டு
கலங்கா திரு!
அரிதாரம் பூசாமல்
அவதாரம் எடு!
அருமையான வரிகள்
பதிலளிநீக்குகவிதையின் கருவும் உருவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
நன்றி ரமணி. தொடர்கின்றேன்.
பதிலளிநீக்கு